ஆகஸ்ட் 19-க்குப் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கயிருப்பதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “துணை முதல்வர் உதயநிதி, இல்லை அமைச்சர் உதயநிதி, ஆக. 19-ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்.” என்று கூறியுள்ளது வைரலாகியுள்ளது.
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.