ரஜினி இடத்தில் சிம்பு! இயக்குநர் போடும் பலே பிளான்!

ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று பெரிய போட்டியே நிலவி வந்தது. இந்த போட்டியில், கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, டி.ஜே.ஞானவேல் உட்பட பல்வேறு இயக்குநர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், டி.ஜே.ஞானவேலை தான், நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்காரணமாக, தனது அடுத்த படங்களுக்கான வேலைகளில் மற்ற இயக்குநர்கள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், தேசிங்கு பெரியசாமியும், தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், ரஜினிக்காக சொன்ன கதையில் சிம்புவை நடிக்க வைப்பதற்கு, அவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.