ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் 3 கோடி பயணிகளின் விவரங்கள் திருட்டு

ரயில்வே துறையில் நேற்று 3 கோடி பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்களை திருடியுள்ளனர். அந்த ஹேக்கர்கள் யார், எங்கிருந்து இயங்கினார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே திணறுகிறது.

ரயில்வே இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் பெயர், மின்அஞ்சல், செல்போன் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இருக்கும். அந்த விவரங்களை வைத்து ஹேக்கர்கள் என்ன செய்ய முடியும் என்பது குறி்த்து சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த விவரங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் திருடினார்களா அல்லது ரயில்வே இணையதளத்தில் இருந்து திருடினார்களா என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவிக்க மறுத்துள்ளது. இதே போல கடந்த 2020ம் ஆண்டு 90 லட்சத்துக்கு மேலான பயணிகளின் விவரங்கள் திருடப்பட்டது.