தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. சில இடங்களில் காற்றின் தரக்குறியீடு 300-ஐ தாண்டியது.
நேற்று காலை முதலே சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக மணலி 322 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது. ஆலந்தூர் 256 வேளச்சேரி 308 அரும்பாக்கம் 256, ராயபுரம் 232 என பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியுள்ளது. இதனால் அதிக பாதிப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.