90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. அஜித், விஜய், கமல்ஹாசன் என்று பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், கடைசி வரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து வந்தார்.
திருமணத்திற்கு பிறகு, டிவி தொடர்களில் கவனம் செலுத்திய இவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், நடிகை தேவயானி தனது மூத்த மகளின் புகைப்படத்தை, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில், தாவணி அணிந்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படமும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.