Connect with us

Raj News Tamil

மார்கழி பிறப்பையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்: ஓடைகளில் குளிக்க தடை!

தமிழகம்

மார்கழி பிறப்பையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்: ஓடைகளில் குளிக்க தடை!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயரிழந்தனர். இதனை அடுத்து மாந்தரும் பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இன்று மார்கழி மாத பிறப்பை ஒட்டி சென்னை, மதுரை, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியில் அதிகாலை முதலே குவிந்தனர். பின்பு பக்தர்கள் காலை 5.30 மணி முதல் அனுமதிக்கப்பட்டு மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் காலை 5.30 மணி முதல் 12 மணி வரட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு அனைத்து பக்தர்களும் அடிவாரப் பகுதியை நோக்கி இறங்கி விட வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top