புதுச்சேரி அடுத்த செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைபூச விழாவை முன்னிட்டு நடைபெற்ற, மிளகாய் அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.
பக்தர்கள் தங்கள் உடல் மீது உரலை வைத்து அதில் மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை இடித்து, அதனை கொண்டு சாமியாருக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோயிலில் தைப்பூச பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கிருந்த சாமியாருக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பக்தர்கள் தங்கள் உடல் மீது உரலை வைத்து அதில் மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை இடித்து, அதனை கொண்டு சாமியாருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது.