இனிமே தப்ப முடியாது.. போலீசாருக்கும் செக் வைத்த டிஜிபி சைலேந்திர பாபு.. நச் அறிவிப்பு!

தலைகவசம் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அபாரதத் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்காரணமாக, 90 சதவீத வாகன ஓட்டிகள், தற்போது தலைகவசம் அணிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், காவல்துறையை சேர்ந்த பலர், தலைகவசமே அணியாமல், பயணித்து வருகின்றனர். இந்நிலையில், இதனை தடுக்கும் விதமாக, அதிரடி அறிவிப்பை, டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தலைகவசம் அணியாமல் பணிக்கு வரும் காவல்துறையினரிடம் இருந்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தலைகவசம் வாங்கி வந்த பிறகு வாகனத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, காவல்துறையினரும், தலைகவசம் அணிய துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.