தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படத்தில், கொக்கி குமார் என்ற டான் கதாபாத்திரத்தில் நடித்து, தனுஷ் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பார்.
தற்போது, இந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியை மையமாக வைத்து, புதிய படம் ஒன்றில், தனுஷ் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தை தனுஷ் தான் இயக்க உள்ளாராம்.
இதுதான் தனுஷின் 50-வது படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையில், தனுஷ்-க்கு உதவியாக செல்வராகவனும் பணியாற்ற உள்ளாராம்.
மீண்டும் கொக்கி குமாரை திரையில் காண்பதற்கு, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.