மீண்டும் சேரும் நட்சத்திர ஜோடி.. ஆனந்த கண்ணீரில் ரஜினி!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு, குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி அன்று நடக்க இருந்தது.

ஆனால், அப்போது, நடிகர் தனுஷ்-ம், ஐஸ்வர்யாவும், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளனர்.

இதனால், வழக்கு விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, மீண்டும் இருவரும் ஆஜராகவில்லையென்றால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் ஆஜராகாமல் சென்றதற்கான காரணம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, தனுஷ்-ம், ஐஸ்வர்யாவும், தங்களது குழந்தைகளின் நலன் கருதி, மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களாம்.

இவர்களது இந்த முடிவின் காரணமாக, ரஜினி உள்ளிட்ட ஒட்டமொத்த குடும்பத்தினரும், மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம்.

RELATED ARTICLES

Recent News