மீண்டும் இணையும் தனுஷ்-ஐஸ்வர்யா?

நடிகர் தனுஷ்-ம் அவரது மனைவி ஐஸ்வர்யாவும், விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனுஷ் திரைப்படங்களில் நடிப்பதிலும், ஐஸ்வர்யா பாடல் இயக்கும் பணியிலும், பிசியாக மாறினார்கள்.

இருப்பினும், தனுஷின் ரசிகர்களும், ரஜினியின் ரசிகர்களும், இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று அவ்வப்போது கமெண்ட்ஸ் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த இருவரிடமும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதால், இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷூம், ஐஸ்வர்யாவும், விவாகரத்து கோரி இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.