ராக்கி, சானிக்காயிதம் ஆகிய 2 படங்களை இயக்கியுள்ளவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து, கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
70-களில் இருந்த கேங்ஸ்டர் கும்பலை மையமாக வைத்து, இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோர், இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கேங்ஸ்டர் திரைப்படங்கள் என்றால், தனுஷிற்கு புதிய தெம்பு கிடைத்துவிடும். இதுவரை இவர் நடித்திருந்து, புதுப்பேட்டை, வடசென்னை, மாரி, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில், தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.