தனுஷ் இயக்கும் அடுத்த படம்! செம அப்டேட்!

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட தனுஷ், பா.பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, மீண்டும் எப்போது தனுஷ் இயக்குவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பான அப்டேட் ஒன்று, தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி, கேப்டன் மில்லர் படத்தின் பிரேக்கின்போது, இயக்க உள்ள படத்தின் Pre-Production பணிகளை தனுஷ் துவங்க இருக்கிறாராம்.

மேலும், கேப்டன் மில்லர் படத்தை முடித்த பிறகு, ஷீட்டிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.