Connect with us

Raj News Tamil

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்..!

சினிமா

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்..!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் தயாராகி உள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக வைக்கப்பட்ட பேனருக்கு தனுசு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர் மன்றம் தலைவர் சதீஷ் தலைமையில் புதுச்சேரியில் உள்ள ரத்னா திரையரங்கில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top