நயன்தாராவுக்கு எதிராக வழக்கு.. தனுஷ் அதிரடி..

நயன்தாராவின் திருமணத்தையும், அவரது வாழ்க்கை பயணத்தையும் கருப்பொருளாக கொண்டு, ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், ‘நானும் ரௌடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள், பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது, இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்நிலையில், 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நயன்தாரா மீது நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக, விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Recent News