தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர், நடிப்பது மட்டுமின்றி, இயக்கம், தயாரிப்பு என்று பல்வேறு பணிகளில், பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது மகனை ஹீரோவாக மாற்றுவதற்கு, முயற்சி செய்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, பல்வேறு இளம் இயக்குநர்களிடம், அவர் கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தனுஷ் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிக்கு, ஐஸ்வர்யாவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், எந்தவொரு மறுப்பு தெரிவிக்கவில்லையாம். இதுமட்டுமின்றி, தனுஷின் இந்த நடவடிக்கை, ரஜினியின் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.