அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அமெரிக்க நடிகர் எட்வர்ட் சொனின்ப்ளிக் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்பு ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார்.