திருமணத்திற்கு முன்பே தனுஷ் பட நடிகை கர்ப்பமா..?

பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி திருவொத்து. தற்போது பா.ரஞ்ஜித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷ்,துல்கர் சல்மான போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தேசிய திரைப்பட விருது, 4- பிலிம்ஃபேர் விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தனது கர்ப்பம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரக்னன்சி கிட் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள நிலையில்,திரைத்துறையினர்,ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுவரை தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லது திருமணம் பற்றியோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.