அச்சு அசல் தனுஷ் போல இருக்கும் மகன்! ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை, பல்வேறு தரப்பினர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யாவின் மகன்கள் இரண்டு பேருடன், நடிகர் ரஜினிகாந்த் நேற்று பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இரண்டு பேரில், ஒருவர் ரஜினியின் தோள் மீது கைப்போட்டுக் கொண்டும், மற்றொரு பேரன், அவர் அருகில் அமர்ந்துக் கொண்டும் உள்ளனர்.

இதில், மூத்த பேரன் பார்ப்பதற்கு, அச்சு அசல் தனுஷ் போலவே உள்ளதாக பல்வேறு தரப்பினர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.