“இந்த விஷயத்தை நீங்க மறந்ததே கிடையாது” – உதயநிதியை பாராட்டிய தனுஷ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள், சுதந்திர போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பாராட்டியிருந்தார்.

அந்த பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து Captain Miller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஷ்வரன்,

இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்.” என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு, நன்றி கூறிய தனுஷ், “உங்களை கவர்ந்த சிறந்த படைப்புகளை, நீங்கள் பாராட்ட தவறியதே இல்லை.

கர்ணன் திரைப்படம் வெளியானபோது நீங்கள் பாராட்டியது, எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. எங்கள் படத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News