நடிகர் தனுஷ் தற்போது தனது இட்லிக் கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு லைன் அப்களை வைத்திருக்கும் தனுஷ், ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடனும் இணைய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் தனுஷ்-ம், இயக்குநர் வெங்கி அட்லூரியும் வாத்தி என்ற படத்தின் மூலம், முதன்முறையாக கூட்டணி வைத்தனர். இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலித்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் வெங்கி அட்லூரி, லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த இப்படமும், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவ்வாறு தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த வெங்கி அட்லூரியுடன், தனுஷ் மீண்டும் இணைய உள்ளாராம். மேலும், இப்படத்திற்கு ஹானஸ்ட் ராஜ் என்று பெயர் வைத்திருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.