Connect with us

Raj News Tamil

தனுஷ் இயக்கும் 3-வது படத்தின் ஹீரோ இவர் தான்!

சினிமா

தனுஷ் இயக்கும் 3-வது படத்தின் ஹீரோ இவர் தான்!

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் தனுஷ். பா.பாண்டி படத்தின் மூலம், இயக்குநராகவும் அவதாரம் எடுத்த இவர், தற்போது தனது 50-வது படத்தை, இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில், அவர் இயக்கும் 3-வது படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தனுஷ் சகோதரியின் மகன் வருண் தான், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

மேலும், இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துவிட்டதாக, தகவல் கசிந்துள்ளது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top