ஜெயிலர் 2-வில் தனுஷ்? அட போங்கப்பா..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ஜெயிலர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த வெற்றியையொட்டி, அதன் இரண்டாம் பாகம் உருவாவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் 2-ஆம் பாகத்தில், நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக, தகவல் ஒன்று இணையத்தில் பரவி வந்தது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், மிகுந்த உற்சாகம் அடைந்திருந்தனர். ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, தனுஷ் அப்படத்தில் நடிக்கவே இல்லை என்றும், தற்போது பரவி வரும் தகவல், முற்றிலும் வதந்தி என்றும் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News