கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ், தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தனுஷ் நடிக்கும் இந்த 50 வது படத்திற்க்கு ‘ராயன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
