Connect with us

Raj News Tamil

ரிலீசாகி 3 மாதங்களுக்கு பிறகு சாதனை படைத்த கேப்டன் மில்லர்!

சினிமா

ரிலீசாகி 3 மாதங்களுக்கு பிறகு சாதனை படைத்த கேப்டன் மில்லர்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருந்தது கேப்டன் மில்லர்.

ரசிகர்கள் மத்தியில் சுமாரன விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் லாபத்தை பார்த்த இந்த திரைப்படம், தியேட்டர் ரிலீசுக்கு பிறகு, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஓடிடியில் வெளியாகி, 40 நாட்கள் ஆகியும், தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில், முதலிடத்தில் இப்படம் இருந்து வருகிறது. மேலும், 14 நாடுகளில், முதல் 5 இடங்களை இப்படம் பெற்றுள்ளது.

குறிப்பாக, இப்படத்தின் இந்தி டப்பிங், தொடர்ச்சியாக 2 வாரங்களுக்கு, முதலிடத்தை பெற்றுள்ளது.

இதுவரை, எந்தவொரு இந்திய திரைப்படமும், உலக அளவில் இப்படியொரு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top