Connect with us

Raj News Tamil

இடத்தை ஆக்கிரமித்த சரத்குமார்? வழக்கு தொடர்ந்த தனுஷின் தாய்!

சினிமா

இடத்தை ஆக்கிரமித்த சரத்குமார்? வழக்கு தொடர்ந்த தனுஷின் தாய்!

சென்னை தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனுஷின் தாய் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில், அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுவான மேல் மாடியை, நடிகர் சரத்குமார் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தனுஷின் தாய் உள்ளிட்ட குடியிருப்புவாசிகள், மாநகராட்சியில் புகார் அளித்தனர். ஆனால், துறை ரீதியான அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே பொறுமையை இழந்த அவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, நடிகர் சரத்குமாரும், சென்னை மாநகராட்சியும், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை, 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

More in சினிமா

To Top