Connect with us

Raj News Tamil

ராயன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷின் மகன்!

சினிமா

ராயன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷின் மகன்!

நடிப்பது மட்டுமின்றி, திரைப்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர் தனுஷ். பா.பாண்டி படத்திற்கு பிறகு, தற்போது ராயன் என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார்.

இந்த படம் தொடர்பான அப்டேட்டை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் மூலம், தனுஷின் மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிப்பின் மீது ஆர்வம் இல்லாத தனுஷின் மகன் யாத்ரா, இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளாராம். இந்த படம் முழுவதுக்கும் யாத்ரா தான், ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளாராம்.

சைலண்டாக ஒரு படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடித்துள்ள யாத்ராவை கண்டு, ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுவரை, ராயன் படத்தின் ஒளிப்பதிவாளர் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top