பதவியை ராஜினாமா செய்த பாஜக நிர்வாகி…ஜெ.பி.நட்டாவுக்கு ஷாக்

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கிருஷ்ணகிரியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். இவர் திறந்து வைத்த நேரம் பார்த்து தருமபுரி, கிருஷ்ணகிரி பாஜக கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவிலிருந்து சிடிஆர் நிர்மல்குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள் 13 என அடுத்தடுத்து விலகினர். விலகிய அனைவரும் அதிமுகவில் இணைந்ததால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கு மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாஜகவின் சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல்குமார் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி” என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News