கேவலமாக பொய் சொன்ன சதீஷ்! கழுவி ஊற்றிய நடிகை!

ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துக் கொண்ட சதீஷ், தர்ஷா குப்தாவின் உடையை கிண்டல் அடித்திருந்தார்.

இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து, பதிவு ஒன்றை சதீஷ் வெளியிட்டிருந்தார். அதில், தன்னுடைய உடை குறித்து பேச வேண்டும் என தர்ஷா குப்தா சொன்னதால் தான், நான் அவ்வாறு பேசினேன் என்று சதீஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தர்ஷா குப்தா, நான் அவ்வாறு சதீஷிடம் சொல்லவே இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும், சதீஷ் இப்படி சொன்னது எனக்கு வன வலியை ஏற்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தர்ஷா குப்தாவின் இந்த பதிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.