தமிழ் சினிமாவில் தோனி மனைவி! ஹீரோ யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி, பல்வேறு கோப்பைகளை பெற்றுத் தந்துள்ளார். தற்போது, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர், தோனி எண்டர்டெயின்ட்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மீது தோனி வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாக, தனத முதல் படத்தை, தோனி தமிழில் தயாரிக்க உள்ளார். தோனியின் மனைவி சாக்ஷியின் கருத்தாக்கத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தை, ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.