தோனியின் 110 மீட்டர் சிக்சர் தான் ஆர்சிபி வெற்றியை எளிதாக்கியது என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.
நேற்று வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கியது.
டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்த நிலையில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 218/5 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணி சென்னை அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இறுதியில், சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
யஷ் தயாள் வீசிய 20ஆவது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. சென்னை அணி வெளியேறியது.
இதுகுறித்து பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தி கூறியதாவது, தோனி 110 மீட்டர் தூரத்தில் மைதானத்திற்கு வெளியே அடித்த அந்த சிக்ஸர்தான் நேற்றைய போட்டியில் சிறப்பான தருணம். அதனால், எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது. அது எங்களுக்கு உதவியது என்றார்.