தல ரசிகரா..? தளபதி ரசிகரா? – ஓபனாக சொன்ன துருவ் விக்ரம்!

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். இந்த படத்திற்கு பிறகு, தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் திரைப்படத்தில், துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் இவர், கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது, “தல ரசிகரா? தளபதி ரசிகரா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு வெளிப்படையாக பதில் சொன்ன அவர், நான் தளபதி ரசிகன் தான் என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த விஜயின் ரசிகர்கள், துருவ் விக்ரமின் வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.