விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படமானது, 2018 ல் வெளிவரவிருந்தது. ஒரு சில காரணங்களால் தள்ளி போனதாக தகவல் வெளிவந்துள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடலையும் படக்குழு நீக்கியது. இந்நிலையில், இந்த பாடல் புதிய காட்சிகளுடன் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.