விக்ரமுக்கு நேரமே சரியில்லை.. அதுக்குள்ள இன்னொர பிரச்சனை..

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில், நடிகர் விக்ரம் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷீட்டிங்கின்போது, விபத்து ஒன்றில், அவர் சிக்கி பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இது தீர்வதற்குள், அடுத்த தலைவலி, விக்ரமுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் தான் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ரிலீஸ் செய்து, ஒரு பிரச்சனையை முடிக்கலாம் என்று காத்திருந்த விக்ரமுக்கு, இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News