கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த திரைப்படம், பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், கைவிடப்பட்டது.
இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 17-ஆம் தேதி அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலரும், 2 பாடல்களும், வெளியாக உள்ளன. இந்த தகவல், விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.