சீயான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். 2018-ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.
ஒருவழியாக ஷீட்டிங்கை முடித்த ஜி.வி.எம், படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், கடன் பிரச்சனை காரணமாக, படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், இந்த படமே வெளியாகாது என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது விடிவு காலம் இந்த படத்திற்கு பிறந்துள்ளது.
அதாவது, துருவ நட்சத்திரம் தொடர்பான பணப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையான 60 கோடி ரூபாயை இயக்குநர் கௌதம் மேனன் தயார் செய்துவிட்டாராம்.
எனவே, இன்னும் சில மாதங்களில் படம் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.