பிரபல ஹீரோவுடன் கூட்டணி சேரும் துஷாரா விஜயன்?

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம், பெரும் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். இந்த படத்திற்கு பிறகு, ரஜினி, தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

சமீபத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்து, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்நிலையில், துஷாரா விஜயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, ரவி அரசு இயக்கத்தில், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தில் தான், நடிகை துஷாரா விஜயன் நடிக்க உள்ளாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News