“துர்காவுக்கு கிடைத்த வரவேற்பு..,” – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த துஷாரா விஜயன்!

சார்பட்ட பரம்பரை படத்தில் இடம்பெற்ற மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் துஷாரா விஜயன். இவர், தனுஷின் ராயன் படத்தில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, ரசிகர்கள் அவருக்கு அளித்த வரவேற்பையொட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால், அது மிகையில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News