மமிதா பைஜுவை தாக்கினேனா? – பாலா விளக்கம்!

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம், வரும் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை புரமோஷன் செய்வதற்கு, பல்வேறு ஊடகங்களுக்கு பாலா பேட்டி அளித்து வருகிறார்.

அவ்வாறு அளித்த பேட்டி ஒன்றில், வணங்கான் படத்தில் இருந்து மமிதா பைஜு விலகியது குறித்தும், மமிதா பைஜு-வை பாலா தாக்கியதாக பரவிய செய்தி குறித்தும், கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பாலா, “அந்த நடிகை என்னுடைய மகளை போன்றவர். நான் அவரை எப்படி அடித்திருப்பேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு வருவது எனக்கு பிடிக்காது. அது தெரியாமல் மேக்கப் கலைஞர் அவருக்கு மேக்கப் போட்டுவிட்டார்.

மேக்கப்புடன் மமிதாவை பார்த்ததும், என் கையை தான் ஓங்கினேன். ஆனால், அவரை நான் அடிக்கவில்லை. அதற்குள், அடித்துவிட்டதாக, செய்தி பரவிவிட்டது” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News