127 கோடி நஷ்ட ஈடு.. விடாமுயற்சி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மையா?

மகிழ் திருமேணி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், லைக்கா நிறுவனத்திற்கு பிரேக்டவுன் படக்குழுவினர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும், தங்களது அனுமதி இன்றி படத்தின் கதையை பயன்படுத்தியதால், 127 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியதாகவும், தகவல் பரவி வந்தது.

இந்த தகவலுக்கு, லைக்கா நிறுவனம் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமலே இருந்து வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் உண்மையிலேயே, பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தானாம்.

அதில் உள்ள சில காட்சிகள், இந்த திரைப்படத்திலும் உள்ளதாம். ஆனால், பிரேக் டவுன் படக்குழு நோட்டீஸ் அனுப்பியதாக பரவிய தகவல் வதந்தியாம். லைக்கா நிறுவனம், 3 மாதங்களுக்கு முன்பே, உரிய அனுமதி பெற்றுவிட்டதாம்.

மேலும், ஜனவரி 10-ஆம் தேதி அன்று, படத்தை ரிலீஸ் செய்வதற்கு, லைக்கா நிறுவனம் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News