இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு மேலுமொரு பாலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் அவரது வீட்டின் மேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர் ஹனீன் அல் கஸ்தானும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் துவங்கியதிலிருந்து இதுவரை 95 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளை முடக்கும் நோக்கில் உண்மைகளை உலகுக்குத் தெரியவிடாமல் தடுக்க பத்திரிகையாளர்களை திட்டமிட்டுக் கொல்வதாக செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.