தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.
தற்போது, இவர்கள் இரண்டு பேருக்கும், இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே விவாகரத்து ஆக இருப்பதாக, திடீரென தகவல் பரவியது.
இதற்கு காரணம் என்னவென்றால், நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விக்னேஷ் சிவன் Unfollow செய்யப்பட்டிருந்தாராம். இதனால், இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக, பலரும் தகவலை பரப்பினர்.
ஆனால், அதன்பிறகே உண்மை என்னவென்று தெரியவந்துள்ளது. அதாவது, இன்ஸ்டாவில் ஏற்பட்ட சிறிய டெக்னிக்கல் பிரச்சனையால் தான், இவ்வாறு நடந்தது என்றும், மீண்டும் விக்னேஷ் சிவன் Follow செய்யப்பட்டுள்ளார் என்றும், தெரியவந்துள்ளது.