இந்தி படித்து தான் கூகுள் சிஇஓ ஆனாரா சுந்தர் பிச்சை பிடிஆர் கேள்வி..?

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய கல்வி நிலையங்களில், இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாடளுமன்ற அலுவல் மொழி கூட்டதிற்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்வு அண்மையில் பரிந்துரை செய்திருந்தார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அலுவல் மொழி கூட்டத்தொடரை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இந்தி மொழியை ஊக்குவிக்க மற்ற மொழியை நசுக்குவாத என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு திமுக எடுத்து செல்லும் என கூறிய அவர், ஐஐடி – யில் படித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு இந்தி தெரியாது என பொது வெளியில் அவரே குறிப்பிட்டுள்ளார் என்றார்.

இந்தி படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியிருந்தால் அவர்,கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என பேசியுள்ளார்.