Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சூர்யா பட நடிகையின் தங்கை ராணுவ வீராங்கனையா? ரசிகர்கள் ஆச்சரியம்!

சினிமா

சூர்யா பட நடிகையின் தங்கை ராணுவ வீராங்கனையா? ரசிகர்கள் ஆச்சரியம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. தோனி திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு, குஷ்பு பதானி என்ற சகோதரி உள்ளார். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது, வீடியோ வெளியிடுவதன் மூலம், குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இவ்வாறு இருக்க, இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்திய ராணுவத்தில் லெஃடினென்ட் ஆக பணிபுரிந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 5 தினங்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட புகைப்படம், தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

ஒரு நடிகையின் சகோதரி, இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருப்பது, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. தற்போது குஷ்பு பதானி, பிட்னஸ் Influencer-ஆக பணியாற்றி வருகிறார்.

More in சினிமா

To Top