Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

என்ன செய்தும் உடல் எடை குறையவில்லையா? இதை ட்ரை பண்ணி பாருங்க! டயட் டிப்ஸ்!

Trending

என்ன செய்தும் உடல் எடை குறையவில்லையா? இதை ட்ரை பண்ணி பாருங்க! டயட் டிப்ஸ்!

உலகில் உள்ள 90 சதவீத மக்களுக்கு உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. என்ன செய்தாலும், இந்த உடல் பருமனை குறைக்க முடியாமல், பலரும் அவதியடைந்து வருகின்றனர். ஜிம்முக்கு சென்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வரும் சிலர், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கான எளிய உணவு முறை குறித்து, தற்போது பார்க்கலாம்..

பின்குறிப்பு:- உடல் பருமன் பிரச்சனையை தவிர, வேறு எந்த உடல் நலப் பிரச்சனையும் இல்லாதவர்கள் மட்டுமே, இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும்..

இரண்டு வகையான உணவு முறைகள் பின்பற்றலாம்..

1. குறைந்த கலோரிகளை உண்ணும் உணவு முறை ( டயட் )

2. குறைந்த கார்ப்போஹைட்ரேட் உண்ணும் உணவு முறை ( டயட் )

முதலில் குறைந்த கலோரிக்கான டயட்டை பார்க்கலாம்..

குறைந்த கலோரி உணவுமுறை:-

காலை:-

3 இட்லி அல்லது தோசை.. 1 கப் சம்பார் அல்லது சட்னி

மதியம்:-

200 கிராம் அளவிற்கு சாதம்.. + 500 கிராம் அளவிற்கு காய்கறிகள் அல்லது கீரைகள் ( எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம் ) + கொஞ்சம் தயிர் + 1 சாம்பார்

இரவு:-

2 தோசை அல்லது 2 சப்பாத்தி + 2 முட்டை

நொறுக்குத்தீனிகள் என்னென்ன சாப்பிடலாம்:-

1. ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சர்க்கரை போடாமல் டீ அல்லது காபி சாப்பிடலாம்.

2. வெள்ளரிக்காய், கொய்யாக்காய் சாப்பிடலாம்.

3. லெமன் ஜூஸ் உப்பு போட்டு சாப்பிடலாம்.

குறைந்த கார்ப்போஹைட்ரேட் உணவுமுறை:-

காலை:-

50 முதல் 75 கிராம் வரையிலான பாதாம் அல்லது 4 முட்டை

மதியம் :-

500 கிராம் அளவிற்கான காய்கறிகள் + 2 முட்டை

இரவு:-

300 முதல் 400 கிராம் வரையிலான இறைச்சி.. ( மீன், சிக்கன் போன்ற அசைவ உணவுகள் ) அல்லது 4 முட்டை

நொறுக்குத்தீனிகள் என்னென்ன சாப்பிடலாம்:-

1. ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சர்க்கரை போடாமல் டீ அல்லது காபி சாப்பிடலாம்.

2. வெள்ளரிக்காய், கொய்யாக்காய் சாப்பிடலாம்.

3. லெமன் ஜூஸ் உப்பு போட்டு சாப்பிடலாம்.

4. பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

முடிவுரை:-

இந்த உணவு முறையை அவரவர்கள் தங்களது உடல் எடையை பொறுத்து சாப்பிட்டு வந்தால், நன்றாக உடல் எடை குறைவதை பார்க்க முடியும். ஆனால், நீரழிவு நோய், இருதய நோய் போன்ற எந்தவொரு பிரச்சனையும் இருக்கக் கூடாது. இந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களை அணுகி, அதற்கேற்றவாறு உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top