விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.
ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், படத்தை புரமோஷன் செய்யும் பணியில், படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அதில், விஜய்-க்கும் உங்களுக்கும் சண்டை என்று செய்தி வந்ததே, அது உண்மையா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்தார்.
மேலும், அந்த செய்தியை நானும், விஜய் அண்ணாவும் சேர்ந்து தான் படித்தோம் என்றும், படித்து முடித்த பிறகு, சிரித்துவிட்டு, அந்த செய்தியை கடந்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.