உலகில் பல்வேறு மதங்கள்; இந்து மதத்தைவிட சிறந்த மதம் கிடையாது: மத்திய அமைச்சர்!

உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன. இதில் இந்து மதத்தைவிட சிறந்த மதம் கிடையாது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறியிருப்பதாவது:

விலங்குகளை நேசிப்பதாக கூறும் சிலர், இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என்று வாதிட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடக்கூடாது என்று அவர்கள் குரல் எழுப்பாதது ஏன்?

இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. முஸ்லிம்கள் மத வழக்கத்தின்படி ஹலால் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதேபோல இந்துக்களும், ஜட்கா இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும். இந்து மத தர்மத்தின்படி, கோயில்களில் விலங்குகளை பலி கொடுக்கும்போது ஒரே வெட்டில் கொன்றுவிட வேண்டும். இதுவே ஜட்கா இறைச்சி ஆகும். உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன. இதில் இந்து மதத்தைவிட சிறந்த மதம் கிடையாது. இவ்வாறு அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News