Connect with us

Raj News Tamil

டிஐஜி விஜயக்குமார் தற்கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

தமிழகம்

டிஐஜி விஜயக்குமார் தற்கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று (ஜூலை 07) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டு, போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விஜயகுமார் தற்கொலை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி, விஜயகுமார், கடந்த 10 ஆண்டுகளாகவே மன நல பாதிப்புக்கு மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக, தனது நெருங்கிய நண்பரிடம் தற்கொலை எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் நேரில் வந்து சந்தித்துள்ளார்.

ஒரே மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் வெவ்வேறு மருத்துவர்களிடம் மாறி மாறி ஆலோசனை பெற்று வந்துள்ளார். வெவ்வேறு பாதிப்புகளுக்கு என்ன வகையான மருத்துவம் பார்ப்பது, சித்த மருத்துவம் பார்ப்பது, மருந்து மாத்திரை உட்கொள்வது என சுயமாக குறிப்புகளை தயார் செய்து வைத்திருக்கிறார்.

விஜயகுமார் மன அழுத்தத்தில் இருப்பதை அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர், எஸ்.பி. பத்ரிநாராயணன் ஆகியோர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

முதல் நாள் இரவே தனது பாதுகாவலர் ரவியிடம் துப்பாக்கியை எங்கே பாதுகாப்பாக வைப்பீர்கள் எப்படி இயக்குவது என்றெல்லாம் கேட்டுள்ளார்.அப்போது பாதுகாவலர் ரவி துப்பாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளார். துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை வழக்கம் போல் எழுந்து யோகா பயிற்சி மேற்கொண்ட டிஐஜி விஜயகுமார் அதன்பிறகு போலீஸ் சார்பில் வழங்கப்படும் தின நிகழ்வு (dsr) அறிக்கையை பார்வையிட்டு இருக்கிறார்.அதன் பிறகு வெளியில் வந்து துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் பிறந்தநாள் விழா நட்சத்திர ஓட்டலில் நடந்துள்ளது. அந்த விழாவில் டிஐஜி விஜயகுமார், தனது மனைவியுடன் சென்று கலந்து கொண்டு உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கோவை கமிஷனர் அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவரது புகைப்படத்திற்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி நாராயணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கமிஷனர் பாலகிருஷ்ணன், இறந்து போன அதிகாரி குறித்து, தவறான தகவல்களை பரப்புவதை சமூக வலைத்தளங்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபோது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கூறுகையில், காவலர் நிலையில் இருக்கும் போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. அதே போல இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் இருக்கும். அதிகாரிகளுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதேபோல போலீஸ் அதிகாரிகளுக்கு மனநலம் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளும் இனி தொடங்கப்படும். மன அழுத்தம், அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

More in தமிழகம்

To Top