வாரிசு பிரச்சனை! தில் ராஜு எடுத்த தில்லான முடிவு!

வாரிசு திரைப்படமும், துணிவு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், இரண்டு திரைப்படங்களுக்கும், சமமான திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தை பொறுத்தவரை, விஜய் தான் நம்பர் ஒண் ஸ்டார் என்றும், அவருடைய படத்திற்கு தான், அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்றும், பேசியுள்ளார்.

மேலும், உதயநிதியை சந்தித்து, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.