ஷங்கர், ராம் சரன் கூட்டணியில் உருவான கேம் சேஞ்சர் என்ற படத்தை, தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.
இந்த திரைப்படத்தின் மூலம் மட்டும், தயாரிப்பாளருக்கு 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதற்கிடையே, தில் ராஜூ தயாரித்த இன்னொரு படமான சங்ராந்திக்கி வஸ்துனாம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதன்மூலம், அவருக்கு 150 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை மட்டுமே எடுப்பதற்கு, தயாரிப்பாளர் தில் ராஜூ முடிவு செய்துள்ளாராம்.